"வுஷு' தற்காப்பு கலைப் போட்டி:  தங்கம் வென்றார் குன்னூர் மாணவி

மாநில அளவிலான  "வுஷு' என்ற தற்காப்பு கலை போட்டியில் குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மாநில அளவிலான  "வுஷு' என்ற தற்காப்பு கலை போட்டியில் குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சீன நாட்டில் போர்க் கலையாக "வுஷு' எனப்படும் தற்காப்பு கலை  உள்ளது. இந்தக் கலை ராணுவ வீரர்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  வரும் ஒலிம்பிக் போட்டியில் "வுஷு' போட்டி சேர்க்கப்பட உள்ளது. அதில் பங்கேற்க நாடு முழுவதும் பல இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி கோவையில் பாப்டிஸ்ட் அகாதெமி சார்பில் மாநில அளவிலான "வுஷு' போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.  இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நீலகிரியில் இருந்து குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.
இதில், அப்பள்ளி மாணவி கிருத்திகா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மாணவிகள் மகாலட்சுமி வெள்ளியும், கவிநிஷா, தீர்க்க தர்ஷினி ஆகியோர் வெண்கலமும் வென்றனர். சண்டிகரில் வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடக்கும் தேசியப் போட்டிக்கு கிருத்திகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com