தென்னிந்திய தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு: தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது

குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் (உபாசி) 126 வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் (உபாசி) 126 வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில்,  தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது வழங்கி தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். 
குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் மாநாடு ஆண்டுதோறும்  நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 126 வது  மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலைத் தூள் தயாரித்த  தனியார்  தொழிற்சாலைகளுக்கு தங்க இலை விருது  வழங்கப்பட்டது.  
விழாவில்  இந்த விருதை வழங்கிய தேசிய நீதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
இந்தியாவில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூளில் 40 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.   வெளிநாடுகளில் தேயிலைத்தூளில் அதிக ரகங்கள் உள்ளன. இந்தியாவில் 35 வகையான தேயிலைத் தூள் ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தரமான தேயிலைத் தூள் தயாரித்த தொழிற்சாலைகளுக்கு விருதுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன என்றார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com