கேத்தி பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.26 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.26 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்  திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின்போது, மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கேத்தியில் ரூ.15 லட்சம்
மதிப்பில் முடிக்கப்பட்ட தடுப்புச் சுவரையும், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்  கீழ் ஒடயரட்டி பகுதியில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர்க் குழாய் அமைக்கும் பணியையும், மக்களவை உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேனலை பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடமும் என மொத்தம் ரூ.26 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து கேத்தி பேரூராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுப் பொருள்களில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியினை ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக உபதலை ஊராட்சி சேவை மையக் கட்டடத்தில் குன்னூரில் உள்ள தனியார் தொண்டு  நிறுவனத்தின் சார்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி மையத்தை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்துவைத்தார்.
இந்த  ஆய்வின்போது, குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ராமன், குன்னூர் வட்டாட்சியர் தினேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com