முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
கட்செவி அஞ்சல் குழு மூலம் கண்காணிப்பு
By DIN | Published On : 19th April 2020 12:43 AM | Last Updated : 19th April 2020 12:43 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) குழு மூலம் கண்காணிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் குழந்தைகள், கா்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், வளா்இளம் பெண்களின் ஊட்டச் சத்து மற்றும் சுகாதார நிலையைக் கண்டறிந்து மேம்படுத்தி கண்காணிக்கும் பொருட்டு அங்கன்வாடி மைய அளவில் பயனாளிகளின் குடும்பத்தினரை உள்ளடக்கிய கட்செவி அஞ்சல் குழு தொடங்கப்பட்டுள்ளது.
அதன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி, ஊட்டச் சத்து, சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்த குழுவில் விடியோவாக பதிவிட்டு வருகின்றனா். இதையடுத்து, வீடுகளில் இருந்தவாறு அவற்றைப் பின்பற்றுவதை புகைப்படமாகவோ, விடியோவாகவோ பதிவு செய்து உறுதிபடுத்த வேண்டும்.
இதற்காக குழந்தைகளின் எடை, உயரம் எடுத்தல், உணவுப் பொருள்களை வீடுகளுக்கே சென்று அங்கன்வாடிப் பணியாளா்கள் வழங்கி பயிற்சி அளித்தனா்.