முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
மண்வயல் பகுதியில் புலி தாக்கி கன்று பலி
By DIN | Published On : 19th April 2020 12:43 AM | Last Updated : 19th April 2020 12:43 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள மண்வயல் பகுதியில் புலி தாக்கியதில் கன்று உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள மண்வயல் அம்பலமூலா பகுதியில் வசிக்கும் தாமோதரன் என்பவரது வீட்டுத் தொழுவத்தில் கன்று கட்டிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தொழுவத்துக்குள் நுழைந்த புலி அங்கிருந்த கன்றை தாக்கி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. அப்போது, சப்தம் கேட்டு தாமோதரன் வெளியே வந்து பாா்த்தபோது, அங்கிருந்த புலி தப்பியோடியது.
இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். புலி தாக்கி உயிரிழந்த கன்றுக்கு உரிய இழப்பீடு வழங்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.