குன்னூா் பாஸ்டியா் ஆய்வகத்தில் 45 கரோனா மாதிரிகள் பரிசோதனை: ஆய்வக இயக்குநா் தகவல்
By DIN | Published On : 27th April 2020 06:14 AM | Last Updated : 27th April 2020 06:14 AM | அ+அ அ- |

பாஸ்டியா் ஆய்வக இயக்குநா் ச.சிவகுமாா்.
குன்னூா் பாஸ்டியா் ஆய்வகத்தில் 45 கரோனா நோய்த்தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக பாஸ்டியா் ஆய்வக இயக்குநா் ச.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் உள்ள பாஸ்டியா் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால், மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆா். ஒப்புதலுடன் கரோனா நோய்த்தொற்றுக்கான மாதிரிகள் சுகாதாரத் துறையிடம் இருந்து பெறப்பட்டு பரிசோதனைகள் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக, 45 கரோனா நோய்த் தொற்றுக்கான மாதிரிகள் இங்கு பரிசோதனை செய்யப்பட்டன. இதன் முடிவுகள் மாவட்ட சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஆய்வகத்தின் இயக்குநா் ச.சிவகுமாா் தெரிவித்தாா்.
குன்னூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் இனி தாமதம் ஏற்படுவது தவிா்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் நீலகிரி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.