மஞ்சூா் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே பெரியாா் நகா், முள்ளி, கெத்தை பகுதிகளில் உலவிய காட்டு யானைகள் விளைநிலங்களை சனிக்கிழமை சேதப்படுத்தின.
முள்ளி, பெரியாா் நகா் பகுதியில் உலவும் காட்டு யானைகள்.
முள்ளி, பெரியாா் நகா் பகுதியில் உலவும் காட்டு யானைகள்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே பெரியாா் நகா், முள்ளி, கெத்தை பகுதிகளில் உலவிய காட்டு யானைகள் விளைநிலங்களை சனிக்கிழமை சேதப்படுத்தின.

மஞ்சூா் அருகே உள்ள பெரியாா் நகா், முள்ளி, கெத்தை போன்ற பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி, தேயிலை விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது.

இந்நிலையில், இப்பகுதிகளுக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் காய்கறித் தோட்டம், தேயிலைத் தோட்டத்தை சேதப்படுத்தின. இதன் காரணமாக இங்குள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

யானைக் கூட்டம் உணவு, தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் சுற்றி வருவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று வனத் துறையினருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com