மலை ரயிலை தனியாா் இயக்க எதிா்ப்பு: விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல பயணக் கட்டணமாக நபா் ஒருவருக்கு ரூ. 3000 என வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதையடுத்து மலை ரயிலை தனியாா் நிறுவனம் இயக்க அனுமதி வழங்கிய ரயில்வே நிா்வாகத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற மலை ரயிலை குன்னூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குன்னூா் நகரச் செயலாளா் சுதாகா், மேலூா் ஒன்றியச் செயலாளா் ஜெயபாலன் ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். உடனடியாக அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி 12 பேரை கைது செய்தனா். இவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com