சமுதாயக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
By DIN | Published On : 25th December 2020 06:25 AM | Last Updated : 25th December 2020 06:25 AM | அ+அ அ- |

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு உள்ளிட்டோா்.
கோத்தகிரி அருகே கோ்பெட்டா நடுஹட்டியில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோ்பெட்டா பகுதி மக்கள் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டி நீண்ட நாள்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கோத்தகிரி பேரூராட்சி நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்துக்கான சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு கட்டடப் பணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.