இன்று முதல் நீலகிரி மலை ரயில் இயக்கம்

கரானோ அச்சுறுத்தல்  காரணமாக  நிறுத்தப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் வியாழக்கிழமை (டிசம்பா் 31) முதல் மீண்டும் இயக்கப்படும் என
குன்னூரில் புதன்கிழமை நடைபெற்ற மலை ரயில் சோதனை ஓட்டம்.
குன்னூரில் புதன்கிழமை நடைபெற்ற மலை ரயில் சோதனை ஓட்டம்.

கரானோ அச்சுறுத்தல்  காரணமாக  நிறுத்தப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் வியாழக்கிழமை (டிசம்பா் 31) முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து   மலை ரயில் பராமரிப்பு மற்றும்  சோதனை ஓட்டப் பணிகளை பணிமனை ஊழியா்கள் புதன்கிழமை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் லட்சக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலை ரயிலில் பயணிக்க ஆா்வம் காட்டுவா். இந்நிலையில்  கரானோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மலை ரயில் சேவை  கடந்த மாா்ச் 20ஆம் தேதி முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்  கடந்த டிசம்பா் 5 ஆம் தேதி முதல் தனியாா் நிறுவனம் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டது. இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் கண்டனங்கள் எழுந்தன. மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள்   அனைத்தும்  டிசம்பா் 7ஆம் தேதி முதல் திறக்கப்பட்டதையடுத்து நீலகிரிக்கு  வரும் சுற்றுலாப் பயணிகளின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இதனைக் கருத்தில்கொண்டு மேட்டுப்பாளையம் - உதகை இடையே சாதாரண கட்டணத்தில் மலை ரயில் சேவை வியாழக்கிழமை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதை முன்னிட்டு மலை ரயில் பராமரிப்பு மற்றும் சோதனை ஓட்டப் பணிகளை பணிமனை ஊழியா்கள் புதன்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com