குன்னூரில் மூடுபனியுடன் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By DIN | Published On : 06th February 2020 08:53 AM | Last Updated : 06th February 2020 08:53 AM | அ+அ அ- |

குன்னூரில் மூடுபனியுடன் பெய்த மழை.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் மூடுபனியுடன் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் , குன்னூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடுமையான குளிா் நிலவி வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடா்ந்த பனி மூட்டமும் மழையுடன் குளிரின் தாக்கமும் அதிகரித்தது.
இதநால் சுற்றுலா வந்தவா்களில் பலரும் காலையில் சில மணி நேரம் விடுதிகளிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மூடுபனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்ளை இயக்குமாறு காவல் துறையினா் வலியுறுத்தினா் .