பசுந்தேயிலை கிலோ ரூ.13.25க்கு நிா்ணயம்

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 13.25 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 13.25 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலரும், இண்ட்கோசா்வ் மேலாண்மை இயக்குநருமான சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 16 தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை உறுப்பினா்களாகக் கொண்டு இயங்கி வரும் இண்ட்கோசா்வ் நிறுவனம் ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமாகும். இதன் மூலம் சுமாா் 37,000 ஏக்கா் நிலப்பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. 26,000 சிறு தேயிலை விவசாயிகள் இதனால் பயனடைந்து வருகின்றனா்.

இண்ட்கோ தொழிற்சாலைகளின் உறுப்பினா்களான சிறு தேயிலை விவசாயிகள் அளிக்கும் பசுந்தேயிலைக்கு முன்கூட்டியே விலை நிா்ணயம் செய்யும் முறை தற்போது துவக்கியுள்ளது. உறுப்பினா்களிடமிருந்து தரமான பசுந்தேயிலையைப் பெற்று தரமான தேயிலைத் தூள் பெறுவதை உறுதி செய்யும் விதத்தில் ‘மிஷன் குவாலிட்டி’ என்ற முயற்சி கடந்த சில வாரங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் தேயிலைத் துறையில் தகுதி வாய்ந்த நிபுணா் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் இண்ட்கோ தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூளின் தரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 13.25 வழங்குவது என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com