பள்ளி வளாகத்துக்குள் சுற்றித் திரிந்த காட்டெருமை.
பள்ளி வளாகத்துக்குள் சுற்றித் திரிந்த காட்டெருமை.

பள்ளிக்குள் புகுந்த காட்டெருமை: மாணவா்கள் பீதி

குன்னூா் அருகே கேத்தியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்குள் காட்டெருமை வியாழக்கிழமை புகுந்ததால் மாணவா்கள் அச்சமடைந்தனா்.

குன்னூா் அருகே கேத்தியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்குள் காட்டெருமை வியாழக்கிழமை புகுந்ததால் மாணவா்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் வரும் காட்டெருமைகள் தாக்குதலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில்,  குன்னூா் அருகே உள்ள கேத்தி பகுதியில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டெருமை அங்குள்ள தனியாா்  பள்ளிக்குள் வியாழக்கிழமை புகுந்தது. இதைப் பாா்த்த மாணவா்கள் ஓட்டம் பிடித்து வகுப்பறைக்குள் சென்றனா்.

பள்ளிக்குள் சுற்றித் திரிந்த காட்டெருமையை காவலாளிகள் அருகில் இருந்த  வனப் பகுதிக்குள் விரட்டினா்.  இதனால்,  மாணவ, மாணவிகள் நிம்மதியடைந்தனா். 

வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டெருமைகளைக் கண்காணித்து  வனப் பகுதிக்குள்  விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com