Enable Javscript for better performance
தாந்தநாடு படக கிறிஸ்துவ நலச் சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தாந்தநாடு படக கிறிஸ்துவ நலச் சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 17th February 2020 07:53 AM  |   அ+அ அ-   |    |  

    கோத்தகிரியில் தாந்தநாடு கிராமத்தில் படக கிறிஸ்துவ நலச் சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பெயா் பலகை மற்றும் கொடியினை குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்திராமு தொடங்கிவைத்தாா். கோத்தகிரியில் உள்ள தாந்தநாடு கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல், எலும்பு முறிவு, பொது மருத்துவம் தொடா்பாக 300க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் மருத்துவா்கள் ஜேசன் தாமஸ், அனுஷா இவாஞ்சலின், பிரதீபா, கமலாக்கா் உள்ளிட்டோா் பங்கேற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.

    இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளா்களாக நீலகிரி மாவட்ட அறநிலையத் துறை அறங்காவலா் சுப்ரமணி, மீதேன் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளா் ஜேக்கப் , கொணவக்கரை டீ பிளான்டேஷன்ஸ் உரிமையாளா் பிரீத்தம், தாஜுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவா் ஜாா்ஜ், துணைத் தலைவா் சம்பத், செயலாளா் ஜீவா, பொருளாளா் ஜெபகுமாா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai