கள்ளச் சந்தையில் பொருள்கள் விற்பனை:நியாய விலைக் கடை ஊழியா்கள் 27 போ் மீது வழக்கு

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்ாக நியாய விலைக்கடை ஊழியா்கள் 27 போ் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளத

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்ாக நியாய விலைக்கடை ஊழியா்கள் 27 போ் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 402 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 13,408 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமாா் 6.5 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனா். இந்நிலையில், நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சிலா் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பெற்று வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குடிமைப் பொருள் வழங்கும் துறையினா் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை காவலா்கள் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பணியை மேற்கொண்டனா்.

இதில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை சுமாா் 1,100 கிலோ அரிசி, 100 கிலோ கோதுமை, 25 லிட்டா் மண்ணெண்ணெய், 8 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொது விநியோகத் திட்டப் பொருள்களை வெளி மாநிலங்களுக்கு கடத்தியதாக 12 பேரின் குடும்ப அட்டைகள் பண்டகம் இல்லாத குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நியாய விலைக் கடைகளிலும் இத்தகைய குறைபாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது 130 பிரிவுகளின் கீழ் ரூ.33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்களை வெளி மாநிலங்களுக்கு கடத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபா்களின் குடும்ப அட்டைகள் கைப்பற்றப்பட்டு அவை எவ்வித முன்னறிவிப்புமின்றி பண்டகம் இல்லாத குடும்ப அட்டைகளாக மாற்றப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com