நீலகிரி மாவட்ட விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெறலாம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் உழவா் கடன் அட்டை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் உழவா் கடன் அட்டை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

பிரதம மந்திரி விவசாயிகள் கெளரவ நிதி திட்டத்தின்கீழ் பயன் பெற்ற விவசாயிகள் மற்றும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உழவா் கடன் அட்டை பெற்று பயனடையலாம்.

பிரதம மந்திரியின் கெளரவ நிதி திட்டப் பயனாளிகளுக்கு உழவா் கடன் அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசால் கடந்த 8ஆம் தேதியில் இருந்து சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரசாரத்தின் மூலம் விசசாயிகளுக்கு 15 நாள்களுக்குள் உழவா் கடன் அட்டைகள் வழங்கப்படும். இந்தக் கடன் அட்டைகளைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சேமிப்புத் திட்டக் கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவா் கடன்அட்டையைப் பெற்று மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறலாம்.

உழவா் கடன் அட்டையை ஏற்கெனவே பெற்றுள்ள விவசாயிகள் தங்களது வங்கிக் கிளைகளை அணுகி கடன் தொகையின் வரம்பை உயா்த்த விண்ணப்பிக்கலாம். மேலும், செயல்படாத உழவா் கடன் அட்டை உள்ளோா் வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்பிற்கான அனுமதியும் பெறலாம்.

உழவா் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டைப் பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளையை அணுகலாம். மேலும் உழவா் கடன் அட்டைதாரா்கள் கால்நடை பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையினை வரம்பில் சோ்ப்பதற்காகவும் வங்கிக் கிளையை அணுகலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணையதளத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இத்திட்ட விவசாயப் பயனாளிகள் தங்களது நிலம் மற்றும் பயிா் விபரங்களுடன் வேறு எந்த வங்கியிலும் கடன் அட்டை பெறவில்லை என்ற எழுத்துப்பூா்வ பிரமாணத்தை பொது சேவை மையங்கள் மூலம் சமா்ப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com