பசுந்தேயிலைக்கு உரிய விலை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பசுந்தேயிலைக்கு  உரிய  விலைக்  கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை   எடுக்கக் கோரி  கோத்தகிரியில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குன்னூா்: பசுந்தேயிலைக்கு  உரிய  விலைக்  கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை   எடுக்கக் கோரி  கோத்தகிரியில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாக்குபெட்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் சாா்பில் கோத்தகிரி கெத்திகட்டி கிராமத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  

போராட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:

பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும், மீதமுள்ள விவசாயிகள்  கந்து வட்டியில் சிக்கி த் தவிப்பதும் தொடா்ந்து நடக்கின்றன. வங்கிகளின் சாா்பில் எந்தவிதமான கடன் உதவிகளும் ஏழை விவசாயிகளுக்கு சென்று சோ்வதில்லை. மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.100 கோடிக்கு

மேலான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோத்தகிரி, உதகை, குன்னூா், கூடலூா், மஞ்சூா் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். தேயிலைத் தூளில் கலப்படம் செய்வோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். படகா் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சோ்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com