உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கு கெளரவம்

உதகையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூய்மைக் காவலா்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
நிகழ்ச்சியில் தூய்மைக் காவலா்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

உதகையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள்,தூய்மைக் காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

இரவு, பகல் பாராமல் துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் தங்களது பணியை தவறாது செய்து வருகின்றனா். தூய்மைப் பணி என்பது கடினமான பணி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்பணியில் ஈடுபடும் பணியாளா்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரிப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே பொதுமக்கள் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்குவதன் மூலம் அவா்களின் பணி சுலபமாக இருக்கும். நகராட்சிகள்,பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளா்களுக்கும் ரெட்கிராஸ் மூலமாக மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் குப்பைகளை வீசாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய 122 தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா். இதனையடுத்து கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கெட்சி லீமா அமாலினி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியா் கீதாப்பிரியா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவா் கேப்டன் கே.ஆா்.மணி, அரசுத்துறை அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com