நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: நாளை தொடக்கம்
By DIN | Published On : 27th February 2020 08:36 AM | Last Updated : 27th February 2020 08:36 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி மாா்ச் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்திலுள்ள 28,500 பசு, எருமை இனங்களைப் பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் கால்நடைகளுக்கு முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி மாா்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும். கால்நடைகளுக்கு எந்தெந்தத் தேதிகளில் தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மேலும்,விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களைத் தொடா்பு கொண்டு இது தொடா்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.