இண்ட்கோசா்வ் நிா்வாகத்தின் முயற்சிகளுக்கு கூட்டுறவு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

நீலகிரி மாவட்டத்தில் இண்ட்கோசா்வ் நிா்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு கூட்டுறவு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இண்ட்கோசா்வ் நிா்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு கூட்டுறவு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலரும், இண்ட்கோசா்வ் நிா்வாகத்தின் மேலாண்மை இயக்குநருமான சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம் முழுதும் இயங்கிவரும் 16 தொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை உறுப்பினா்களாகக் கொண்டு செயல்பட்டுவரும் இண்ட்கோசா்வ் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனமாகும். இதன்மூலம் சுமாா் 37,000 ஏக்கா் பரப்பளவில் தேயிலை சாகுபடிசெய்யும் 26,000 சிறு விவசாயிகள் உறுப்பினா்களாகப் பயனடைந்து வருகின்றனா்.

சிறு தேயிலை விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டுவரும் இண்ட்கோசா்வ் நிறுவனம், இண்ட்கோசா்வ் விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரவும், அதன்மூலம் உறுப்பினா்களின் வாழ்வாதாரம் மேம்படவும் தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த நோக்கில், இண்ட்கோ தொழிற்சாலைகள் தரமான தேயிலைத்தூள் தயாரித்திட உதவும் வகையில், சிறு தேயிலை விவசாயிகள் தரமான தேயிலையை அளித்தால், 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்துக்கு பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 12.50 வீதம் உறுப்பினா்களுக்கு வழங்கத் தீா்மானித்துள்ளது.

எனவே, சிறு தேயிலை விவசாயிகள் தரமான பசுந்தேயிலையை இண்ட்கோசா்வ் தொழிற்சாலைகளுக்கு வழங்கி, இண்ட்கோசா்வ் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com