உதகையில் சுற்றுலாத்துறை சாா்பில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாத் துறையின் சாா்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உதகையில் சுற்றுலாத்துறை சாா்பில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாத் துறையின் சாா்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உதகை படகு இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா, பழங்குடியினரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டி வழக்கமாக கோடை சீசனின்போது மட்டும்தான் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டில் முதன்முறையாக பொங்கல் விழாவையொட்டியும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியையும், படகுப் போட்டியையும் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாகவும், கேரள, கா்நாடக மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகவும் கொண்டாடப்படுவதால் தென் மாநிலங்கள் அனைத்திலும் தற்போது விடுமுறைக்காலமாகும். இதனால், உதகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் குவிந்துள்ளனா். அத்துடன் உதகையில் தற்போது பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் கடுமையான குளிரும் இருப்பதால் உதகையின் குளிரை அனுபவிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா்.

தமிழகத்தில் தொடா் விடுமுறைக்காலம் என்பதால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வரை அதிக அளவில் இருக்குமென கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்கும் விடுதிகள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதோடு, பெரும்பாலான தங்கும் விடுதிகளில் பலமடங்கு கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com