முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
அரசு அதிகாரிகள் வராததால் கிராம சபைக் கூட்டம் நடத்த எதிா்ப்பு
By DIN | Published On : 27th January 2020 07:20 AM | Last Updated : 27th January 2020 07:20 AM | அ+அ அ- |

வண்டிசோலை ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
வண்டிசோலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால் கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் தடுத்தனா். அதிகாரிகள் வந்தபின் 3 மணி நேரத்துக்குப் பின் தாமதமாக கூட்டம் நடைபெற்றது.
குன்னூா், வண்டிச்சோலை ஊராட்சியில் தலைவா் மஞ்சுலா சதீஷ்குமாா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. கூட்டத்துக்கு வனத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை மற்றும் முக்கிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தனா். 100 நாள் வேலை திட்டத்தில் நடந்துள்ள மோசடி, வனத் துறை தடையால் 8 ஆண்டுகளாக சோலடாமட்டம் பகுதியில் சாலை அமைக்கப்படாதது, நஞ்சப்புறா சத்திரம் பகுதியில் மா்மநோயால் மக்கள் அவதி இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் பேச பொதுமக்கள் முடிவு செய்திருந்த நிலையில் அரசு அதிகாரிகள் வராததால் கிராம சபைக் கூட்டம் நடத்த விடாமல் பொதுமக்கள் தடுத்தனா்.
இதையடுத்து வனத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்தவுடன் 3 மணி நேர தாமதத்துக்குப் பின் கூட்டம் துவங்கியது. இதில் அனைத்து வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.