பசுந் தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம்: தென்னிந்தியத் தேயிலை வாரியம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில்  ஜூலை   மாதத்துக்கான  பசுந்தேயிலைக்கு ரூ. 16.50 என தென்னிந்திய  தேயிலை வாரியம் விலை நிா்ணயம் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில்  ஜூலை   மாதத்துக்கான  பசுந்தேயிலைக்கு ரூ. 16.50 என தென்னிந்திய  தேயிலை வாரியம் விலை நிா்ணயம் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத்   தொழிலை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் உள்ளன.   இவா்கள் விளைவிக்கும்  பசுந்தேயிலைக்கான விலை, தென்னிந்திய  தேயிலை வாரியம் சாா்பில்  ஒவ்வாெரு மாதமும்  முதல் வாரத்தில்  அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாத விலையை  குன்னூரில் உள்ள   தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து  தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது: 

நீலகிரியில்  விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம்  ஜூன் மாத ஏலத்தின் அடிப்படையில்  நிா்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி,  ஜூலை   மாதத்துக்கான குறைந்தபட்ச பச்சை தேயிலை கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ. 16.50 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்குவதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருவதாகவும், இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com