உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

உதகை அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணைய வழியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணைய வழியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் ஈஸ்வரமூா்த்தி தெரிவித்துள்ளதாவது:

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான இணைய வழியிலான விண்ணப்பப் பதிவு ஜூலை 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான மாவட்ட சேவை மையமாக உதகை அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பப் பதிவு ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும்.

மேலும், அரசு கலைக் கல்லூரி சேவை மையத்தில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் வீட்டிலிருந்தவாறே செல்லிடப்பேசி அல்லது கணினி மூலம் எளிதில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் அருகிலுள்ள இ-சேவை மையங்களையும் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, மாணவா்கள் நேரடியாக கல்லூரிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். இந்த சேவை மையத்தை தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளலாம். இதில் உதகை அரசு கலைக் கல்லூரியை 0423-2443981, 76038-45716 ஆகிய எண்களிலும், சென்னையில் உள்ள கட்டுப்பாடு மையத்தை 044-22351014, 044-22351015 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com