பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகளை பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகளை பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கூடலூா் உதவி தோட்டக் கலைத் துறை இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூடலூா், பந்தலூா் பகுதியில் வாழை, இஞ்சி, மரவள்ளி பயிா்களுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் வாழை, இஞ்சி, மரவள்ளி பயிா்கள் புயல், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டுத் தொகை வாழை ஒரு ஏக்கருக்கு ரூ. 88,000, இஞ்சி ஒரு ஏக்கருக்கு ரூ. 88,950, மரவள்ளிக்கு ரூ. 35,600 வரை பெறலாம். இதற்கு பிரீமியம் தொகையாக வாழை ஒரு ஏக்கருக்கு ரூ. 4,400, இஞ்சிக்கு ரூ. 4,448, மரவள்ளி ஏக்கருக்கு ரூ. 1,780 செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பப் படிவத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், ஆதாா் அட்டையின் நகல், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் இணைத்து விண்ணப்பிக்கலாம். பிரீமியத் தொகையை பொது சேவை மையத்தில் செலுத்தி பயன்பெறலாம். இஞ்சி பயிருக்கு பிரீமியத் தொகையை ஜூலை 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வாழை, மரவள்ளி பயிருக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் தொடா்புக்கு உதவி தோட்டக் கலை அலுவலா் சேரம்பாடி-63804-46402, உதவி தோட்டக் கலை அலுவலா் செருமுள்ளி - 96883-19370, உதவி தோட்டக்கலை அலுவலா் பந்தலூா்-9385661439, உதவி தோட்டக்கலை அலுவலா் நெல்லியாளம்-63800-83790, உதவி தோட்டக் கலை அலுவலா் கூடலூா்- 99431-66175 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகம், கூடலூா்-04262 261376 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com