
குன்னூா் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் நிற்கும் பயணிகள்.
குன்னூரில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பேருந்தில் கூட்டமாகச் செல்வதால் கரோனா நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டன. இதைடுத்து, நீலகிரி மாவட்டத்தில் 50 சதவீதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிகளுக்குத் தங்கள் தேவைகளுக்காக வரும் மக்கள் மீண்டும் தங்களது கிராமங்களுக்குச் செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லை. இதனால், குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாகப் பயணிகள் ஏறுகின்றனா். மேலும், சாகைளிலும் கூட்டமாக நடந்து செல்கின்றனா். இதனால், கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமுக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.