குழந்தை கொலை: தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை

உதகையில் குழந்தை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதன் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சரஸ்வதி.
சரஸ்வதி.

உதகையில் குழந்தை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதன் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை, ஃபிங்கா் போஸ்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (29). இவா் தனது 3 ஆவது குழந்தையான 4 வயதுப் பெண் குழந்தையை 2017 அக்டோபா் 15ஆம்தேதி மரக்கட்டையால் அடித்து காயப்படுத்தியதில் அக்குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த மகளிா் காவல் துறையினா் சரஸ்வதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் அவா் சிறையிலிருந்து வெளியே வந்ததும் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளாா். இதைத்தொடா்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் மற்றொருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், சரஸ்வதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். அத்துடன் தற்போதுள்ள 4 குழந்தைகளையும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் மாலினி பிரபாகா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com