நீலகிரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில் சுமாா் 30 நாள்களுக்கு பிறகு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை வரை 22 நபா்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை குன்னூரில் மேல் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த 2 ஆண்கள், ஒரு பெண்ணுக்கும், வெலிங்டன் சப்ளை டிப்போ பகுதியைச் சோ்ந்த ஒரு ஆணுக்கும் நோய்த்தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் 14 போ் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் தற்போது 12 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

இவா்களைத்தவிர உதகை, குளிச்சோலை, காந்தல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 போ் சந்தேகத்தின்பேரில் கோவைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனா். இவா்களின் சோதனை முடிவுகள் இன்னமும் வெளியாகாத நிலையில் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், தற்போதைய இன்கோசா்வ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான சுப்ரியா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com