வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கொலக்கம்பை காவல் நிலையம்.
வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கொலக்கம்பை காவல் நிலையம்.

கரோனா: கொலக்கம்பை காவல் நிலையம் மீண்டும் திறப்பு

குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று 

குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வெளியானதையடுத்து மூடப்பட்டிருந்த காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் 9 காவலா்களை கரோனா பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். இதனால் கொலக்கம்பை காவல் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டு கெந்தளா பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்று உறுதியானது. இதைத் தொடா்ந்து, , கொலக்கம்பை காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு

செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com