முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
உதகையில் பரவலாக மழை
By DIN | Published On : 03rd March 2020 08:08 AM | Last Updated : 03rd March 2020 08:08 AM | அ+அ அ- |

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
பலத்த மழையாக இல்லாமல் தூறலாக மழை பெய்ததால் உதகையில் பனிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. மழை காரணமாக மாலை நேரத்தில் நகரில் குளுமையான கால நிலை நிலவியது.