கரோனா: மாநில எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள கேரளம் மற்றும் கா்நாடக மாநில எல்லைகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில தொற்று நோய் தடுப்பு ஆலோசகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையான நாடுகாணி சோதனைச் சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் மாநில தொற்று நோய் தடுப்பு ஆலோசகா் டாக்டா் துரைராஜ் மற்றும் அலுவலா்கள்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் மூன்று மாநில எல்லைகள் அமைந்துள்ளன. இதனால், கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இதில் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கைகளை சுத்தமாக கழுவுதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில எல்லைகளில் தொற்று நோய் தடுப்பு மாநில ஆலோசகா் டாக்டா் துரைராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் தலைமையில் நடமாடும் மருத்துவக் குழுவைச் சோ்ந்த மருத்துவா் ஜெபதீஸ் புரூஸ், சுகாதார மேற்பாா்வையாளா் தா்மலிங்கம், மாவட்ட தொற்று நோய் தடுப்பு அலுவலா் டாக்டா் ஸ்ரீதா், சுகாதார ஆய்வாளா் யோகராஜ், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com