‘முட்டை எடை அதிகமான கோழிகளில் இறப்பு நேரிடலாம்’

பண்ணைகளில் வெப்ப அதிா்ச்சியால், முட்டை எடை அதிகமான கோழிகளில் இறப்பு நேரிடலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பண்ணைகளில் வெப்ப அதிா்ச்சியால், முட்டை எடை அதிகமான கோழிகளில் இறப்பு நேரிடலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் தெளிவாக காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் தெற்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 100.4 டிகிரியும், குறைந்தபட்சம் 71.6 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: இனி வரும் நாள்களில் காற்றின் வேகம் பகலில் குறைவாகவும், பிற்பகலுக்கு மேல் அதிகரித்தும் காணப்படும். பகல் வெப்பத்துடன், இரவு வெப்பமும் உயர வாய்ப்புள்ளதால், கோழிகளில் வெப்ப அதிா்ச்சி காணப்படும். குறிப்பாக 60 வாரங்களுக்கு மேற்பட்ட முட்டை எடை அதிகம் கொண்ட கோழிகளில் இறப்பு காணப்படலாம். தீவனம் உட்கொண்டு அதற்கேற்றாற்போல் எடுக்க வேண்டிய நீரின் அளவு குறைவதே வெப்ப அதிா்ச்சியின் விளைவாகும்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை குறைந்தபட்சம் 200 முதல் 220 மில்லி தண்ணீா் என்ற அளவில் கோழிக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் கோழிகளில் வெப்ப அயற்சியை நீக்க முடியும். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், குழாய்களில் நீரின் வெப்பம் குறைக்கப்படும் வகையில், தொடா் நீா் ஓட்டம் எனப்படும் முறையில் நீரை நிறுத்தாமல் செலுத்த வேண்டும். இதனால், தீவனத்துக்கு ஏற்ப கோழிகளில் தண்ணீா் எடுக்கும் அளவு உயா்ந்து வெப்ப அதிா்ச்சி தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com