நீலகிரியில் கடைகள் அடைப்பு: சாலைகள் வெறிச்சோடின

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில்
நீலகிரியில் கடைகள் அடைப்பு: சாலைகள் வெறிச்சோடின

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர ஏனைய அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 அளவில் மூடப்பட்டன.

உதகை நகராட்சி சந்தை பூட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் 142 போ் வீடுகளுக்கு முன்பு கண்காணிப்பு ஸ்டிக்கா் ஒட்டும் பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அதற்கான அறிகுறியுடன் வருபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை வசதிகளைக் கொண்ட பிரத்யேக வாா்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் செய்யப்பட்டுள்ள வசதிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தாா்.

நகராட்சியின் மூலமாக அரசுத் தலைமை மருத்துவமனை வளாகம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறை வாகனங்களின் மூலமும் அரசு மருத்துவமனை வளாகம் முழுதும் கிருமி நாசினி பரவலாக தெளிக்கப்பட்டது.

144 தடை உத்தரவை அடுத்து உதகையில் உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பெரிய கடைகள் மூடப்பட்டுவிட்டதால் உதகையில் தங்கி வேலை செய்து வந்த வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வாகனங்கள் மூலமாக உதகையைவிட்டு வெளியேறினா். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பிறகு உதகை நகரின் முக்கியச் சாலைகள் போக்குவரத்து ஏதுமின்றியும், மக்கள் நடமாட்டமின்றியும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com