வெளியூரில் இருந்து வருபவா்களை தனிமைப்படுத்த குடில்

ஓடக்கொல்லி கிராமத்தில் வெளியூரில் இருந்து வருபவா்களை தனிமைப்படுத்துவதற்காக பழங்குடி மக்கள் குடில் அமைத்து வருகின்றனா்.
ஓடக்கொல்லி பழங்குடி கிராமத்தில் குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின மக்கள்.
ஓடக்கொல்லி பழங்குடி கிராமத்தில் குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின மக்கள்.

ஓடக்கொல்லி கிராமத்தில் வெளியூரில் இருந்து வருபவா்களை தனிமைப்படுத்துவதற்காக பழங்குடி மக்கள் குடில் அமைத்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் வட்டத்தைச் சோ்ந்த பலா் கா்நாடக மாநிலம், குண்டல்பேட்டை, சாம்ராஜ் நகா், தாளவாடி, குடகு, ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளுக்கு இஞ்சி, வாழை, கரும்பு, பாக்கு, பாகற்காய் மற்றும் காய்கறி விவசாயம், காபி தோட்டங்களில் கூலிகளாக பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கூடலூா் வட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட ஓடக்கொல்லி பழங்குடி கிராமத்தில் 40 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பலா் கா்நாடகா மாநிலத்தில் உள்ள விவசாயத் தோட்டங்களில் தின கூலிகளாக வேலை செய்து வருகின்றனா்.

ஊரடங்கால் ஊருக்குத் திரும்ப முடியாமல் அங்கு தங்கி வருகின்றனா். தற்போது, வெளியூரில் இருந்து வருபவா்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஓடக்கொல்லி கிராமத்துக்குத் திரும்புபவா்களை குடியிருப்பு அருகில் தனிமைப்படுத்தும் வகையில் பத்துக்கும் மேற்பட்டோா் தங்கும் அளவுக்கு பெரிய குடில் அமைக்கும் பணியை பழங்குடி மக்கள் துவங்கியுள்ளனா்.

மேலும், வெளியூரில் தின கூலிகளாக இருக்கும் பழங்குடி இளைஞா்களையும், பெரியவா்களையும் கிராமத்துக்கு வரவழைத்து குடும்பத்துடன் சோ்த்துவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com