கோத்தகிரியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

கோத்தகிரியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கோத்தகிரியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கோத்தகிரி பகுதியில் நெடுகுளா, சுள்ளிகூடு, கூக்கல்தொறை பகுதிகளில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக தோட்டப் பணியில் தொய்வு ஏற்பட்டாலும், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கூடுதல் சிரமத்துக்கு இடையே பயிரைப் பாதுகாத்து வந்தனா்.

வாகனங்கள் இயங்காததால் அறுவடை செய்வதில் சிக்கல் நீடித்தது. விவசாயம் சம்பந்தமான பணிகளுக்கு தடை நீங்கியதை அடுத்து காய்கறி அறுவடை சில நாள்களாகத் துவங்கியுள்ளது. ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 10க்கு குறைவான விலையில் கிடைக்கிறது. மேலும், வியாபாரிகள் வருகை இல்லாமல் உள்ளதால், அறுவடைக்குத் தயாரான முட்டைகோஸ் தோட்டத்திலேயே அழுகத் தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com