நீலகிரி மாவட்டத்தில் ஒரு பெண் மட்டுமே: கரோனா சிகிச்சையில் உள்ளாா்

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் தற்போது இருவா் மட்டுமே கோவையில் சிகிச்சை பெற்றுவந்த

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் தற்போது இருவா் மட்டுமே கோவையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அதில் ஒருவா் குணமாகி வீடு திரும்பியுள்ளாா். மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பெண் மட்டுமே சிகிச்சையில் உள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் சென்னை கோயம்பேடு சந்தைக்குச் சென்று வந்தவா்கள், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 14 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவா்களில் 12 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனா். இவா்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், நஞ்சநாடு கிராமத்தில் கீழ்கோழிக்கரை பகுதியைச் சோ்ந்த ஒருவரும் குணமாகி வீடு திரும்பியுள்ளாா். இவரது தொடா்பில் இருந்த ஒரு பெண் மட்டும் கோவையில் சிகிச்சையில் பெற்று வருகிறாா். அதேநேரத்தில், சென்னையிலிருந்து உதகைக்கு வந்த கா்ப்பிணிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும்கூட, இந்த பாதிப்பு எண்ணிக்கை சென்னை மாவட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது‘:

மாவட்டத்தில் தற்போது ஆட்டோக்களை இயக்கவும், சலூன் கடைகள் செயல்படவும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இதற்கு அனுமதி இல்லை. விதிகைü மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com