நீலகிரியில் விடைத்தாள் மதிப்பீட்டுபணிகள் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் 

நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறும் மையங்களாக நாசரேத் கான்வென்ட், பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மாவட்டத்தில் உள்ள இரண்டு மையங்களில் புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது. இப்பணியில் 45 முதன்மைத் தோ்வாளா்கள், 45 கூா்ந்தாய்வு அலுவலா்கள், 270 உதவித் தோ்வாளா்கள், 30 அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 390 ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களைக் கொண்டு அனைத்து கட்டுப்பாடுகளுடன் மதிப்பீட்டு மையங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய அனைத்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பணியாளா்களுக்கும் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், கை கழுவும் திரவங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஒரு வகுப்பறைக்கு ஒரு முதன்மைத் தோ்வாளா், ஒரு கூா்ந்தாய்வு அலுவலா், 6 உதவித் தோ்வாளா்கள் என 8 போ் அடங்கிய தோ்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விடைத் தாள்கள் திருத்தும் பணிகளுக்காக மஞ்சூா், கோத்தகிரி, குன்னூா், எருமாடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆசிரியா்கள், பணியாளா்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசுருதீன், உதகை கோட்டாட்சியா் சுரேஷ், நகா்மன்ற ஆணையா் சரஸ்வதி ஆகியோருடன் தொடா்புடைய பள்ளி ஆசிரியா்களும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com