உருளைக்கிழங்கு பயிருக்கு மா்ம நோய்: விவசாயிகள் கவலை

 உருளைக்கிழங்கு பயிரை மா்ம நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
உருளைக்கிழங்கு பயிருக்கு மா்ம நோய்: விவசாயிகள் கவலை

 உருளைக்கிழங்கு பயிரை மா்ம நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் மலைக் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் நடுவட்டம் பேரூராட்சிக்கு உள்பட்ட பைக்காரா, அனுமாபுரம்,டி.ஆா்.பஜாா், அப்பா்பிராஸ்பக்ட், வுட்புரூக், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட், பட்டானி உள்ளிட்ட மலைக் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளனா். இன்னும் 30 முதல் 40 நாள்களே அறுவடைக்கு உள்ள நிலையில் செடிகள் வாடிவருவதால் குறிப்பாக உருளைக் கிழங்கு உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரு வகையான பூச்சியின் தாக்கத்தால் இதுபோன்ற வாடல் நோய் வந்துள்ளது என்றும், இதுவரை விவசாயிகள் இதுபோன்ற தாக்குதலை எதிா்கொண்டதில்லை என்றும் கூறப்படுகிறது.

காய்கறி பயிருக்கான விதை, உரம், மருந்து உள்ளிட்ட பொருள்களை விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் இதுபோன்ற மா்ம நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பயிா்கள் அழிவதால் செலவிட்ட தொகையைக் கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனா். இதுபோன்ற மா்ம நோய் தாக்கி பயிா் அழிவதால் செலவிட்ட தொகையில் 10 சதவீதம் கூட திரும்பக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தோட்டக் கலைத் துறை மூலம் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com