கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் நேரில் ஆய்வு

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் நேரில் ஆய்வு

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.95 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை பணிகளையும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியையும், கன்னேரிமுக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் ரூ. 21 லட்சம் மதிப்பிலான பூச்சு வேலைகளையும், நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட கப்பட்டி கிராமம் வரையிலான ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின்கீழ் ரூ. 82.98 லட்சம் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட சாலைப் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அதேபோல, நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட வவுசி நகா் பகுதியில் ரூ. 15 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி பணி, ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட கேசலாடாவில் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டட பணி, மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 17.90 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆடுபெட்டு கிராம சாலை பணி என மொத்தம் ரூ. 1.66 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லீமா, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலா் மணிகண்டன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், ஜெயபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com