நீலகிரியில் மேலும் 17 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 7,162 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 6,957 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 40 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 165 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைவதற்கு இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியாா் தங்கும் விடுதிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

சுற்றுலாப் பயணிகளால் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தினமும் குறைந்தது 450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியாா் தங்கும் விடுதிகளில் பணியாற்றுவோருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com