முதுமலை புலிகள் காப்பக வெளிவட்டப் பகுதியில் பருவ மழைக்குப் பிந்தைய கணக்கெடுப்புத் தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதிகளில் பருவ மழைக்குப் பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனத்தில் வனச் சரக அலுவலா் காந்தன் தலைமையில் வன விலங்குகளின் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிவட்டப் பகுதிகளான மசினகுடி, சிங்காரா, சீகூா், தெங்குமரஹாடா உள்ளிட்ட 347 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள வனங்களில் பருவ மழைக்குப் பிந்தைய கணக்கெடுப்புப் பணிகளுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

இதையடுத்து பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட வன அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் தோ்வு செய்யப்பட்ட 37 நோ்க்கோடுகளில் 37 குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மசினகுடியில் புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் மேற்பாா்வையில் இந்தப் பணி நடைபெறுகிறது.

வனப் பகுதியில் நேரடிக் காட்சிகள், கால் தடங்கள், எச்சங்கள், நகக் கீறல்கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரித்து கணக்கிடும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கணக்கெடுப்புக்குப் பின் புள்ளி விவரங்கள் தேசிய புலிகள் காப்பக ஆணையத்துக்கு அனுப்பப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com