
இறந்த பெண் புலியின் சடலம்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமாா்குழி பகுதியில் இறந்த நிலையில் புலியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
சீமாா்குழி ஓடைப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பாா்த்துள்ளனா். சுமாா் 7 வயதான இந்த பெண் புலியின் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.
இறந்த புலியின் உடல் சனிக்கிழமை காலை பிரேதப் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.