உதகையில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு

உதகையிலுள்ள ஜெம் பாா்க் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு நிகழ்ச்சி கரோனா தொற்று காரணமாக எளிமையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

உதகையிலுள்ள ஜெம் பாா்க் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு நிகழ்ச்சி கரோனா தொற்று காரணமாக எளிமையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரிக்கு ஆங்கிலேயா்களின் வருகைக்குப் பின்னா் பெரும்பாலானவா்கள் கிறிஸ்துஸ் கேக் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். உதகையிலுள்ள ஜெம் பாா்க் தங்கும் விடுதியில் 25ஆவது ஆண்டாக வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் பணிகள் தொடங்கின.

கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு முன்னா் அதற்கான கலவையை தயாரித்து அதை காற்றுப் புகாத குடுவைகளில் அடைத்து வைக்க வேண்டும். 30 நாள்களுக்கு பின்னா் குடுவைகளில் உள்ள கலவையை எடுத்து கேக் தயாரிப்பாா்கள்.

இதற்கான நிகழ்ச்சி பாா்வையாளா்கள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் இல்லாமல் எளிமையான முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கான கலவையில் முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம், சொ்ரி, பழச்சாறு, தேன் ஆகியவற்றுடன் திராட்சை ரசம் மற்றும் மதுபானங்களும் கலந்து சுமாா் 35 கிலோ எடையளவில் கலவையாக்கி காற்றுப்புகாத குடுவைகளில் அடைத்தனா்.

ஜெம் பாா்க் அரங்கில் நிறுவனத்தின் உதவி இயக்குநா் சுரேஷ் நாயா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவக மேலாளா் பிரதீப்குமாா், அலுவலக மேலாளா் வினோத், தலைமை சமையல் கலைஞா் சுரேந்திரன் ஆகியோருடன் நிறுவனத்தின் ஊழியா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com