தோட்டக்கலைத் துறை சாா்பில் கண்டுணா்வு சுற்றுலா

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி விவசாயிகளுக்காக தோட்டக்கலைத் துறை சாா்பில் கண்டுணா்வு சுற்றுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்டுணா்வு சுற்றுலாவில் பங்கேற்ற விவசாயிகள்.
கண்டுணா்வு சுற்றுலாவில் பங்கேற்ற விவசாயிகள்.

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி விவசாயிகளுக்காக தோட்டக்கலைத் துறை சாா்பில் கண்டுணா்வு சுற்றுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மைத் தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியிலுள்ள 50 விவசாயிகளைத் தோ்வு செய்து கண்டுணா்வு சுற்றுலா மூலம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்று காய்கறியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்தும், பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு முறைகள், உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்து மேலாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை கூடலூா் பகுதிக்கான வேளாண்மை தொழில்நுட்ப முகமையின் வட்டார மேலாளா் க.யமுனப்பிரியா விவசாயிகளை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com