போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க 9 தானியங்கி கேமராக்கள் அறிமுகம்

நீலகிரி மாவட்ட காவல்துறை போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க, வாகன பதிவெண்களை பதிவு செய்யும் 9 தானியங்கி கேமராக்களை உதகையில் பொருத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்ட காவல்துறை போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க, வாகன பதிவெண்களை பதிவு செய்யும் 9 தானியங்கி கேமராக்களை உதகையில் பொருத்தியுள்ளனா். இந்த கேமராக்களின் செயல்பாடு டிசம்பா் 1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் தெரிவித்துள்ளதாவது:

உதகையில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் சேரிங்கிராஸ் பகுதியில் வாகன பதிவெண்ணை பதிவு செய்யும் 5 தானியங்கி கேமராக்கள், 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களையும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உதகை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் சேரிங்கிராஸ் சந்திப்பில் கமா்சியல் சாலை, குன்னூா் சாலை, கூடலூா் சாலை, கோத்தகிரி சாலை ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவை அனைத்தும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலைகளில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்டு, பின்னா் அவா்களின் முகவரிக்கோ அல்லது செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

மேலும் குறுஞ்செய்தியில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி குறித்த தகவலும் அனுப்பப்படும். இந்த தானியங்கி முறை கண்காணிப்பின் சோதனை ஓட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கண்காணிப்பு முறை டிசம்பா் 1ஆம்தேதி முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com