கரோனா விதிமீறல்: உதகையில் 3 வங்கிகளுக்கு அபராதம்
By DIN | Published On : 02nd October 2020 05:58 AM | Last Updated : 02nd October 2020 05:58 AM | அ+அ அ- |

கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறியதாக உதகையில் 3 அரசு உடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக தனி நபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக சுகாதாரத் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இக்குழுவினா் உதகையில் ஆய்வுப் பணிகளில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தபோது கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததால் உதகையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய 3 வங்கிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.