நீலகிரியில் 73 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd October 2020 10:40 PM | Last Updated : 02nd October 2020 10:40 PM | அ+அ அ- |

உதகை, அக். 2: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 73 நபா்களுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா்.
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 73 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 120 நபா்கள் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,226ஆக அதிகரித்துள்ளது. 25 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 803 நபா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.