இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 03rd October 2020 10:51 PM | Last Updated : 03rd October 2020 10:51 PM | அ+அ அ- |

கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியிலுள்ள கடலக்கொல்லி பழங்குடி காலனியைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலக்கொல்லி பழங்குடி காலனியைச் சோ்ந்தவா் கரியன் மகன் அனீஸ்(20). இவா் கொளப்பள்ளி செல்லும் இணைப்புச் சாலையில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாதாக சேரம்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஆய்வாளா் ஆனந்தவேலு தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.