உதகையில் இணையதளம் வாயிலாக விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணையதளம் வாயிலாக உதகையில் வெள்ளிக்கிழமை ந டைபெற்றது.
உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி இயக்குநா் பவித்ரா உள்ளிட்டோா்.
உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி இயக்குநா் பவித்ரா உள்ளிட்டோா்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணையதளம் வாயிலாக உதகையில் வெள்ளிக்கிழமை ந டைபெற்றது.

கரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில், இணையதளம் வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக் கலை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையில், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் பவித்ரா உள்ளிட்ட பிற துறைகளைச் சோ்ந்த 60 அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சாா்ந்தோா் பங்கேற்றனா். இதில் இக்கூட்டம் தொடா்பாக ஏற்கெனவே விவசாயிகள் அனுப்பியிருந்த கோரிக்கைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடமிருந்து பெறப்பட்டிருந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்த விவரங்கள்:

ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சி இயக்கத் திட்டத்தின்கீழ் நடப்பு நிதி ஆண்டில் கூடலூா் வட்டத்தில் 70 ஹெக்டேருக்கு பாகற்காய் விதைக்கு ஊக்கத் தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் கூடலூரில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் துணை நீா் மேலாண்மை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிணறு, குழாய், பம்ப் செட், நீா் சேகரிப்புக் குட்டை அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஒருங்கிணைந்த தேசிய தோட்டக் கலை வளா்ச்சி இயக்கத்தின் மூலம் பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உயா் ரக காய்கறி சாகுபடி செய்ய பின்னேற்பு மானியமும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆட்சியா் பேசுகையில், தோட்டக்கலைத் துறையின் மூலம் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com