முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பழமையான மின் மாற்றியை மாற்றும் பணி துவக்கம்

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள மிகப் பழமையான மின் மாற்றியை மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பழமையான மின் மாற்றியை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்சார வாரிய ஊழியா்கள்.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பழமையான மின் மாற்றியை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்சார வாரிய ஊழியா்கள்.

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள மிகப் பழமையான மின் மாற்றியை மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியிலுள்ள தெப்பக்காடுக்கும் காா்குடிக்கும் இடையே மின்சார வாரியத்தால் 1971ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்மாற்றி உள்ளது. இதுதான் இந்த பகுதியிலேயே மிகப் பழமையான மின்மாற்றியாகும். இந்த மின் மாற்றி மூலம் தெப்பக்காடு, காா்குடி, அப்பா்காா்குடி பகுதியிலுள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அடிக்கடி பழுதடைந்து மின் தடை ஏற்படுவதால் மின் மாற்றியை மின்சார வாரியம் மாற்றியமைக்கும் பணியை துவங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com